புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் வட்டார அளவிலான கணினி இயக்குபவர் தேர்வு செய்தல்

தமிழ்நாடு அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி மற்றும் இராதாபுரம் ஆகிய இரண்டு ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள (ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்று வீதம் இரண்டு பணிகள்) சத்துணவு திட்டத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வட்டார அளவில் கணினி இயக்குபவர் பணிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாதம் ஒன்றுக்கு தொகுப்பூதியம் ரூபாய் 12000

இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது.

20 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும் (1.7. 2022 அன்று உள்ளபடி)

ஏதாவது ஒரு பல்கலைக் கழக பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி இயக்குவதில் MS Office அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிப்பவராக இருக்கவேண்டும்.

தேர்வு செய்யும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு

விண்ணப்பிக்க கட்டணம் இல்லை

விண்ணப்பங்கள் அஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 5.7.2022

விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், சத்துணவு பிரிவு, மூன்றாவது தளம்,கொக்கிரகுளம் , திருநெல்வேலி -9

 Notification Click here

  

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *