PUBLISH DATE : 01/08/2022
செ.வெ.எண்:-90/2022
நாள்:29.07.2022
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் கிழக்கு வட்டம், வடகாட்டுப்பட்டி, கோம்பைபட்டி, ராகலாபுரம் மற்றும் ஜோத்தாம்பட்டி ஆகிய 4 கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் கிழக்கு வட்டம், வடகாட்டுப்பட்டி, கோம்பைபட்டி, ராகலாபுரம் மற்றும் ஜோத்தாம்பட்டி ஆகிய 4 கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு பின்வரும் தகுதிகளை கொண்ட நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை பத்திரிக்கை விளம்பரம் வரப்பெற்ற நாளில் இருந்து 15 தினங்களுக்குள் திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
வடகாட்டுப்பட்டி கிராம உதவியாளர் பணியிடத்திற்குரிய தகுதிகள்,
1.பொதுப்போட்டி முன்னுரிமையற்றவர்
2.கல்வித்தகுதிகுறைந்தபட்சம் 5-ம் வகுப்புதேர்ச்சி
3.வயது 01.07.2022 அன்றுகுறைந்தபட்சம் 21 ஆண்டுகள்,அதிகபட்சம் 37 ஆண்டுகள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சம் 32ஆண்டுகளுக்குள் இருக்கவேண்டும்.
4.ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். சம்மந்தப்பட்டநபர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
5.பணியிடம் காலியாகஉள்ளகிராமமும், 2 கி.மீ. சுற்றளவில் அருகாமை தகுதியானநபர்கள் கிடைக்காதபட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ளகுறுவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், காலிப்பணியிடம் அமைந்துள்ள கிராமங்களுக்கு வட்ட அளவிலான அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கோம்பைபட்டி கிராம உதவியாளர் பணியிடத்திற்குரிய தகுதிகள்,
1.பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம் நீங்கலாக) முன்னுரிமையற்றவர்
2.கல்வித்தகுதிகுறைந்தபட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி
3.வயது 01.07.2022 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சம் 37ஆண்டுகள் இருக்க வேண்டும்.
4.ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். சம்மந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
5.பணியிடம் காலியாக உள்ள கிராமமும், 2 கி.மீ. சுற்றளவில் அருகாமை தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள குறுவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், காலிப்பணியிடம் அமைந்துள்ள கிராமங்களுக்கு வட்ட அளவிலான அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ராகலாபுரம் கிராம உதவியாளர் பணியிடத்திற்குரிய தகுதிகள்,
1.பொதுப்போட்டி முன்னுரிமையற்றவர்
2.கல்வித்தகுதிகுறைந்தபட்சம் 5-ம் வகுப்புதேர்ச்சி
3.வயது 01.07.2022அன்றுகுறைந்தபட்சம் 21 ஆண்டுகள்,அதிகபட்சம் 37ஆண்டுகள் இருக்கவேண்டும்.பொதுப்பிரிவினர் அதிகபட்சம் 32ஆண்டுகளுக்குள் இருக்கவேண்டும்.
4.ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். சம்மந்தப்பட்டநபர்களின் பெயர்கள் வேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும்.
5.பணியிடம் காலியாக உள்ள கிராமமும், 2 கி.மீ. சுற்றளவில் அருகாமை தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ளகுறுவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், காலிப்பணியிடம் அமைந்துள்ள கிராமங்களுக்கு வட்ட அளவிலான அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஜோத்தாம்பட்டி கிராம உதவியாளர் பணியிடத்திற்குரிய தகுதிகள்,
1.ஆதிதிராவிடர் – பெண் – ஆதரவற்ற விதவை – முன்னுரிமையற்றவர்
2.கல்வித்தகுதிகுறைந்தபட்சம் 5-ம் வகுப்புதேர்ச்சி
3.வயது 01.07.2022 அன்றுகுறைந்தபட்சம் 21 ஆண்டுகள்,அதிகபட்சம் 37 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
4.ஆதிதிராவிடர் இன பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சம்மந்தப்பட்டநபர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
5.பணியிடம் காலியாக உள்ள கிராமமும், 2 கி.மீ. சுற்றளவில் அருகாமை தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள குறுவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், காலிப்பணியிடம் அமைந்துள்ள கிராமங்களுக்கு வட்ட அளவிலான அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Village Assistant Jobs click here
Official Notification Click here