நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு வரும் ஏப்., 5 ஆம் தேதி நேர்காணல் தொடக்கம்.
கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தேதி அறிவிப்பு..!
கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் நாமக்கல் – திருச்செங்கோடு சாலை, சுரபி பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கிறது.
கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் வரும் ஏப்., 5 முதல் 12 வரை (ஞாயிறு நீங்கலாக) தினமும் காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரையும் நடக்கிறது.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு, நேர்காணலில் கலந்து கொள்ள நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில் அழைப்பு கடிதம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலில் நேரில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முக அழைப்பு கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள், வரும் ஏப்., 4-ல், மண்டல இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கூடுதல் கட்டிடம், 2-வது தளம், அறை எண், 336 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.