திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு பின்வரும் தகுதிகளை கொண்ட நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை 24.08.2022-ம் தேதிக்குள் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும். மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.

தகுதிகள்:

1.கல்வித்தகுதி: கல்வித் தகுதி குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி.

2.வயது வரம்பு: (30.06.2022 அன்று) குறைந்த பட்சம் 21ஆண்டுகள், அதிகபட்சம் இதர பிரிவு/30-ம், பி.வ. /மி.பி.வ./32-ம், தா.வ./பழங்குடியினர்/37-ம் இருக்க வேண்டும்.

3.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

4.காலியிட விபரம்:

1.சீலப்பாடி கிராமம்- BC (Other than Backward Class Muslims) Non- Priority – Tamil Medium

2.தெத்துப்பட்டி கிராமம் – ST – Priority – (Both Men and Woman) – Tamil Medium

5.காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும் பொழுது

அ.பணியிடம் காலியாக உள்ள கிராமம்,

ஆ. 2 கி.மீ. சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும்,

இ.இல்லாத நிலையில் குறுவட்ட அளவிலும்,

ஈ.குறுவட்ட அளவிலும் தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள வட்ட அளவில் மட்டுமே தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.

6.மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

VAO Assistant Jobs click here

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *