தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை வட்டம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கான நிர்வாக பயிற்சி மையத்திற்கான முதல்வர் மற்றும் இளநிலை உதவியாளர் /கணினி இயக்குபவர் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமனம் செய்ய தகுதி உள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 1.8.2022 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதர விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் அலுவலக நாட்களில் அலுவலகநேரத்தில் நேரில் வந்து கேட்டு தெரிந்தும் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் திருக்கோயிலின் இணையதளத்தில் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முதல்வர்- ஒரு பணியிடம்

35 வயதிற்கு மேல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

முதுகலை ஆசிரியராக 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தொகுப்பூதியம் 35000/-

இளநிலை உதவியாளர் / கணினி இயக்குபவர் : 2 பணியிடம்

18 வயது முதல் 35 வயது வரை

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட கணினி அறிவியலில் பட்டயப் படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
Junior assistant Posts Notification Click here

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *