திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சார்ந்த தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டும் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டும் பணி நியமனம் செய்ய 13.01.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின் படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி – 620 006.

விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகளை https://srirangam.org/ மற்றும் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

ஆகம ஆசிரியர் பணியிடத்திற்கான தகுதிகள்:-

ஏதேனும் வேத ஆகம பாடசாலையில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் ஐந்தாண்டு கால அளவிற்கு குறையாமல் முதுநிலை அர்ச்சகராக பணி புரிந்திருக்க வேண்டும்.

வைணவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத ஆகம பாடசாலையில் நான்கு ஆண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ஆகம ஆசிரியர் விண்ணப்பதாரர் 1.7.2021 அன்று 35 வயது நிரம்பாதவராக இருத்தல் வேண்டும். 35 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம், ஆனால் 35 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றாலோ அல்லது தகுதியான நபர்கள் இல்லை என்றாலோ 35 வயதை கடந்த விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவர்.

சம்பளம் ரூ.36000-114000/-

காலியிடம் : 01

சமையலர் பணியிடத்திற்கான தகுதிகள்:

தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும்

50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

1.7.2021 அன்று வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.12000/-

காலியிடம் : 01

சமையல் உதவியாளர் பணியிடத்திற்கான தகுதிகள்:

தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்,

உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

1.7.2021 அன்று வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.10000/-

காலியிடம் : 01

எழுத்தர் பணியிடத்திற்கான தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

1.7.2021 அன்று வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.10000/-

காலியிடம் : 01

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான தகுதிகள்: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

1.7.2021 அன்று வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.7500/-

காலியிடம் : 01

பொதுவான தகுதிகள் :

விண்ணப்பதாரர் இந்து சமயத்தை சேர்ந்தவராகவும் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பை பொறுத்தவரை அரசால் அவ்வப்போது பிறப்பிக்கப்படும் உத்தரவின்படி பரிசீலிக்கப்படும்

திருக்கோயில் ஆகம விதிகளுக்கும் பழக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்13.01.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திருக்கோயில் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

திருக்கோயில் நிர்வாகத்தால் பிரசுரம் செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதில் மட்டுமே பூர்த்தி செய்து புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

இணைக்கப்படும் சான்றுகள் சான்றொப்பம் (Attested Xerox copies only) பெற்று அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ற சான்றிதழ் பெற்று இணைக்கப்பட வேண்டும்.

மேற்படி சான்று அறிவிப்பு தேதிக்கு பின் பெற்றிருக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் வரும் விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும்.

நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நாளில் / நேரத்தில் தனது சொந்த செலவில்/ பொறுப்பில் அனைத்து அசல் சான்றுகளுடன் ஆஜராக வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் வரிசை எண் மற்றும் ———————பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620 006 என்ற முகவரிக்கு நேரிலோ or அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

மேலும் ரூபாய் 25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடன் கூடிய அஞ்சல் உறையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

https://srirangam.org/

Archakar Training Institutions Staff Vacancy fill Notification Click here
Archakar Training Institutions Staff Vacancy fill Application Click here

Sri Ranganatha Swamy Temple Jobs 2021 Click here

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *