தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட் (சிம்கோ)-வில் கீழ் இயங்கி வரும் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மருத்துவமனைகளில் பணிபுரிய கீழ்காணும் பதவிகளுக்கு தகுதியான நபர்களை நேரடி பணி நியமனம் மூலம் பணி அமர்த்த உத்தேசித்துள்ளது.
பதவியின் பெயர் : ஹோமியோபதி மருத்துவர்
கல்வித்தகுதி : BHMS
வயது வரம்பு : 22-35
சம்பளம் ரூ.15800-35500/-
பணியிடங்கள் எண்ணிக்கை: ஆறு
பதவியின் பெயர்: ஆயுர்வேதிக் மருத்துவர்
கல்வித்தகுதி : BAMS
சம்பளம் ரூ.15800-35500/-
பணியிடங்கள் எண்ணிக்கை : ஆறு
பதவியின் பெயர் : யுனானி மருத்துவர்
கல்வித்தகுதி : BUMS
சம்பளம் ரூ.15800-35500/-
பணியிடங்கள் எண்ணிக்கை : ஒன்று
பதவியின் பெயர் : யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர்
கல்வித்தகுதி : BNYS
சம்பளம் ரூ.15800-35500/-
பணியிடங்கள் எண்ணிக்கை : ஆறு
குறிப்பு: மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.
நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பை ரத்து செய்வதற்கோ நிறுத்தி வைக்கவோ சிம்கோ கூட்டுறவு சங்கத்திற்கு அதிகாரம் உண்டு.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்ப படிவங்களை https://simcoagri.com/our-career.html என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேற்படி பதவிகளுக்கான பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ் ,தொழில்நுட்ப தகுதி சான்றிதழ், முன் அனுபவசான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் ஆகிய நகல்களில் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர், SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY லிமிடெட் (சிம்கோ) டவுன்ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் -632004 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 28.02.2023 மாலை 4.30 PM மணி வரை
SIMCOAGRI CLICK HERE