தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம், தலைமைச் செயலகம், சென்னை 600 009.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகத்தில் தொலைபேசி இணைப்பாளருக்கு காலி பணியிடத்தினை நிரப்பும் பொருட்டு கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் :தொலைப்பேசி இணைப்பாளர் -01
ஊதியம் 19,500- 71900
வயது 1.7.2023 அன்று உள்ளபடி 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்
அதிகபட்ச வயது பொது பிரிவு 32 வயதுதிற்குள் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர் 34 வயதுதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் வகுப்பினர் / பழங்குடியினர் 37 வயதுதிற்குள் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள் வழங்கப்படும்.
2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டம் பிரிவு 20(8) -ம் பொருந்தும்.
தகுதிகள்:-
2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டம் 20(1) -இல் படிக்க பெறும் அட்டவணை -III இல் குறித்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச பொது கல்வி தகுதி அல்லது அதற்கு இணையான தகுதிகள் மற்றும் தொலைபேசி இணைப்பக செயல்பாட்டிற்கு தேவையான பயிற்சி சான்றிதழை தொலைபேசித் துறை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொலைபேசி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும்.
இருப்பினும் மற்ற தகுதிகள் சமமாக இருக்கும் பட்சத்தில் தொலைபேசி இணைப்பாளர் பணியினை மேற்கொள்வதற்கு மருத்துவ ரீதியாக அறிவிக்கப்பட்ட உடல் ஊனமுற்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அனைத்து சுய விவரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் மற்றும் சுய சான்றொப்பமிட்ட தகுதிக்கான அனைத்து சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் செயலாளர், சட்டமன்றப் பேரவைச் செயலகம், தலைமைச் செயலகம் சென்னை 600 009 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17.7.2023
https://assembly.tn.gov.in/index.php
NOTIFICATION CLICK HERE