Social welfare and Women Empowerment Department

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

மைய நிர்வாகி ,முதுநிலை ஆலோசகர் மற்றும் வழக்குப் பணியாளர் பணியிடங்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட உள்ளது.

கரூர் மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை தட்டச்சு செய்து 28.4.2023 பிற்பகல் 5 45 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

மைய நிர்வாகி : 01

மைய நிர்வாகி பதவிக்கு விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சி பணிகள், ஆலோசனை உளவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஐந்து ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூபாய் 30,000 மாத ஊதியம் வழங்கப்படும்

முதுநிலை ஆலோசகர்-01

முதுநிலை ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சி பணிகள் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சம்பளம் ரூ.20000/-

வழக்குப் பணியாளர்-01

வழக்குப் பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

முதுநிலை சமூகப்பணி, வளர்ச்சி பணிகள், சமூகவியல் முதுநிலை சமூக உளவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூபாய் 15,000 மாத ஊதியம் வழங்கப்படும்.

Notification Click here

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *