தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் 18 இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

காலி பணியிடங்கள் பற்றிய விவரம் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

மேற்கண்ட காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும் நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளது.

மேற்கண்ட பணியிடங்களுக்கான ஊதியம் இடைநிலை ஆசிரியருக்கு ரூபாய் 7500 வீதம் வழங்கப்படும்.

இதற்கான கல்வி தகுதி பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடத்தின் பெயர் : இடைநிலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்

கல்வித் தகுதி : ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வளராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இல்லையெனில் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியல் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் மேற்கண்ட இந்த தற்காலிக பணி நியமனமானது நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல் 2023 மாதம் வரை உள்ள மாதங்களுக்கு மட்டுமே நியமனம் செய்யப்படும்.

அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி காலி பணியிட விவரங்களை தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமாக விண்ணப்பத்தினை உரிய கல்வித் தகுதி சான்றாவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண் .35 இல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 18.1. 2023 அன்று மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Temporary Teachers Recruitment Click here

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *