தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி விடுதிக்காப்பாளர் மற்றும் சமையலர் பதவிகளின் பணி நியமனம் செய்வதற்காக கீழ்கண்ட விவரப்படி ஆன காலி பணியிடங்களுக்கு தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி அடிப்படையில் தகுதி உள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 6.6.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஓதுவார் பயிற்சி பள்ளி மாணவர்கள்- விடுதி காப்பாளர் -01 காலியிடம்

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ.20,000/-

ஓதுவார் பயிற்சி பள்ளி -சமையலர்-01 காலியிடம்

ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் ,சுவையாகவும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

தினக்கூலி ரூ.300 / நாள் ஒன்றுக்கு

வயது வரம்பு : 18-45 க்குள் இருக்க வேண்டும்.

இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரி இருவரிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியாக பதிவு தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பப்படும் உரையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டவை.

விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும்.

அசல் சான்றிதழ்கள் அனுப்பக் கூடாது, அசல் சான்றுகள் அனைத்தும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படும் பொழுது எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பங்களை https://samayapurammariamman.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதள முகவரியில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பெயரில் உள்ள இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இணை ஆணையர் /செயல் அலுவலர். அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621112

https://samayapurammariamman.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *