திருநெல்வேலி மாவட்டம் வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு பெண் விண்ணப்பதாரர்களியிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு பெண் விண்ணப்பதாரர்களியிடமிருந்து மற்றும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி முற்றிலும் தற்காலிகமானது ஆகும், இதன் மூலம் பணி நிரந்தரம் அல்லது வேறு சலுகைகள் முன்னுரிமை ஏதும் கோர இயலாது.
மொத்த காலியிடங்கள் : 20
அம்பாசமுத்திரம்-01
சேரன்மகாதேவி-3
களக்காடு-2
மானூர்-4
பாளையங்கோட்டை-3
பாப்பாக்குடி-2
ராதாபுரம்-1
வள்ளியூர்-4
பணியிடமானது எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
வட்டார ஒருங்கிணைப்பாளர் ஒப்பந்த ஊதியம் ரூபாய் 12000/-
வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தகுதிகள் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office குறைந்தது மூன்று மாத சான்றிதழ் வகுப்பு (Certificate Course) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது Computer Science அல்லது Computer Application-இல் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
1.1.2023 – ல் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தை போன்ற திட்டங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய எல்லை பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:-
விண்ணப்பம் https://tirunelveli.nic.in என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் மட்டும் பூர்த்தி செய்து வேண்டும் வேறு வகையில் வரும் விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் ( திருநங்கைகள் உட்பட)
விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி, பணி அனுபவ சான்று, கல்வி சான்று ஆகியோரின் நகல்கள் கண்டிப்பாக பதிவேற்றப்பட வேண்டும்.
விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் முழுமையாக பூர்த்தி செய்திட வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.03.2023
Notification Click here
Application Click here
https://forms.zohopublic.in/collrtnv/form/Test/formperma/7IQBw2WjtjCId23ZuV3XWTzdaZP-SHcLLaApZLR5Vwg