திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர்), மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் கீழ்க்கண்ட தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது. ஐ.டி.ஐ-ல் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை 20.07.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

தொழிற்பிரிவுகள்

1.கம்மியர் கருவிகள் (Instrument Mechanic) 2 ஆண்டுகள் படிப்பில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வெண்டும்.

2.தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு (Information & communication Technology & System Maintenance) – 2 ஆண்டுகள் படிப்பில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வெண்டும்.

3.கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (Computer Operator and Programming Assistant) ஓராண்டு படிப்பில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4.டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டர் (Desktop Publishing Operator) ஓராண்டு படிப்பில் சேர 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5.தையல் வேலை தொழில்நுட்பம் (Sewing Technology) ஓராண்டு படிப்பில் சேர 8/10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6.அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம் Surface Ornamentation Technique (Embroidery) ஓராண்டு படிப்பில் சேர 8ஃ10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7.நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் (Fashion Design & Technology) ஓராண்டு படிப்பில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8.திறன் மின்னனுவியல் தொழில்நுட்ப பணியாளர் (Technician Power Electronics System) 2 ஆண்டுகள் படிப்பில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வெண்டும்.

பயிற்சியில் சேருவோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிகணினி, பஸ் பாஸ் வசதி, மகளிருக்கு உச்சகட்ட வயது வரம்பு இல்லை, மத்திய அரசின் NCVT சான்றிதழ் வழங்கப்படும், விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி ஆண்டு தோறும் வழங்கப்படும், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா காலணிகள், மொழித்திறன் மற்றும் கணினி பயிற்சி, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா அடையாள அட்டை வழங்கப்படும், இலவச விடுதி வசதி உண்டு.

மேலும் விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), முதல்வரை நேரிலோ அல்லது தொலைபேசி இணைப்பு எண் 0451 – 2470504 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சேர்க்கை குறித்த விவரம் அறிந்துகொள்ளலாம்
Notification Click here

Govt ITI Notification Click here


By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *