Cuddalore District Cooperative Milk Producers Union

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு ஒப்பந்த முறையில் விற்பனை செயலர்களை தற்காலிகமாக பணி அமர்த்திட நேர்காணலுக்கு அழைப்பு விடப்படுகிறது.


ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் பால் உப பால் உப பொருட்களின்  விற்பனையை அதிகரிக்கும் பொருட்டும் பிபிஏ அல்லது எம்பிஏ பட்டம் பெற்ற விற்பனை துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களை ஒப்பந்த முறையில் விற்பனை செயலர்களாக தற்காலிக தொகுப்பூதிய  அடிப்படையில் பணியமற்ற கீழ்கண்ட தகுதிகளும் திறமைகளும் உள்ள இளைஞர்களிடமிருந்து நேர்காணல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கல்வித் தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிபிஏ அல்லது எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது 35 வயதிற்குள்  இருக்க வேண்டும்.


பாலினம்: ஆண் மற்றும் பெண் 


இருப்பிட விவரம் :  கடலூர் மாவட்டத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.


மொழி : தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.


மாத தொகுப்பூதியம்  முதல் மாதம் ரூபாய் 7500/- தகுதிக்கேற்ப இரண்டாம் மாதம் முதல் 15,000/- மற்றும் பயணப்படி ரூபாய் 1000/-


காலியிடங்களின் எண்ணிக்கை : 5 



பணியிடம் : கடலூர், சிதம்பரம், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், திட்டக்குடி, வேப்பூர் மற்றும் காட்டுமன்னார்கோயில்


கூடுதல் தகுதிகள் : சொந்தமாக இரு சக்கர வாகனம் மற்றும் கைபேசி வைத்திருக்க வேண்டும் மற்றும் களப்பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.



மேற்படி பணிக்காக 12.7.2023 அன்று காலை 11 மணிக்கு இவ்வொன்றிய  தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு சுயவிவரத்தை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




டி.என்.டி 1898 கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், விருத்தாச்சலம் மெயின் ரோடு, புவனகிரி தாலுகா, சேத்தியா தோப்பு -608 702



Cuddalore District Cooperative Milk Producers Union has released a notification to fill the 5 vacant posts of Sales Secretary for the sale of milk and milk related products. 


NOTIFICATION CLICK HERE

By M

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *