தமிழ்நாடு அரசு சமையலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
தென்காசி மாவட்டத்தில் உள்ள இணை இயக்குநர் நலப் பணிகள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள சமையலர் 5 காலியிடங்கள் மற்றும் சலவையாளர் மூன்று பணிடங்களுக்கு பணிபுரிய விருப்பம் உள்ள தகுதியான நபர்கள் இவ் அலுவலகத்தில் 10.04.2023 மாலை 5 மணிக்குள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், கல்வி சான்று மற்றும் சாதி சான்று ஆகியவற்றின் நகல்களுடன் பதிவு அஞ்சலில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கல்வித் தகுதி : குறைந்தபட்சம் எழுத படிக்க தெரிந்திருத்தல்/ எட்டாம் வகுப்பு தேர்ச்சி
ஊதிய விகிதம் ரூ.15700-50000
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் அலுவலகம் தென்காசி-627 811
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 10.04.2023
Notification Click here