தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை,அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை,
வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு
சென்னை -4, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் கீழ்கண்ட விவரப்படியான காலி பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி உள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடமிருந்து 23.3.2023 ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பதவியின் பெயர்: இளநிலை உதவியாளர் : இரண்டு
சம்பளம் ரூ.18500-58600
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: தமிழ் புலவர்-01
சம்பளம் ரூ.18500-58600
யாதொரு பல்கலைக்கழகத்தில் அல்லது அதற்கு இணையான தமிழில் பீலிட் அல்லது பிஏ அல்லது எம்.எ அல்லது பட்டம் கல்வி தகுதி பெற்றிருத்தல்
மற்றும் திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: தவில்-01
சம்பளம் ரூ.18500-58600
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் இசைக்கருவிகளை வாசிப்பதில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியதுடன் யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது யாதொரு அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் நடத்தப்படும் தவில் பள்ளிகளில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: பிளம்பர் -01
சம்பளம் ரூ.18000-56900/-
அரசால் / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில் /குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும் மற்றும் தொடர்புடைய பிரிவில் ஐந்து ஆண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகள் தொழில் பழகுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: வேத பாராயணம் -01
சம்பளம் ரூ.15700-50000/-
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்ச 3 ஆண்டுகள் படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: உதவி பரிச்சாரகர்-01
சம்பளம் ரூ.10000-31500/-
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கோயில்களின் வழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
1.7. 2022 அன்று உள்ளவாறு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்து சமய அறநிலையத்துறை https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Notification Click here